அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து. ;  11 பேர் பலி.

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஸ்பாக்ஸ் பிராந்தியத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலி நோக்கி புறப்பட்ட படகு மஹ்தியா நகருக்கு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்தது.

இதில், படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 பேரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 15 பேர் மாயமாகி உள்ளனர்.