அடங்காத தாகம் முடங்காமல் எழும்!

கவிதை.

வரலாற்றை போதிக்கும்
வலியே நிரந்தரமானது,

தொலைவான் தேசம்
தொலையாது ஒருநாளும்,

அழும் எம் மொழி
அழிவை எதிர்க்கும்.

அடங்காத தாகம்
முடங்காமல் எழும்,

மரணம் தத்தெடுத்த
இடத்தை காலம் தடுத்தாழும்.

துயரத்தின் முடிவிடத்தில்
தூங்காது விடுதலைப்பாடல்,

அரங்கத்தை விட்ட அந்த வாழ்வு
சிகரத்தை தொடும்,

எதுவரை நீடிக்கும்
இந்த அழுகை…!

உறுதியாய் உள்ள ஆத்மாவை
எவராலும் அழிக்கமுடியாது,

  • தே.பிரியன்-
    புகைப்படம் − தே.பிரியன்
    இடம் – முள்ளிவாய்க்கால்
    18/05/2022