அடுத்த பத்தாண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வசிக்கலாம். ; நாசா

அடுத்த பத்தாண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வசிப்பார்கள் என நாசா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டெமிஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்கால மனிதர்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள இது வழிவகுக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டானது மனித உடலின் மாதிரி ஒன்றை எடுத்துச் செல்வதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. அது ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்வாக கண்டிப்பாக இருக்கும் எனவும் நாசா தரப்பு தெரிவித்துள்ளது.

 நாம் மீண்டும் நிலவில் காலடியெடுத்து வைக்க இருக்கிறோம், இந்த வாகனமானது மக்களை நிலவுக்கு கொண்டு செல்ல இருக்கிறது.

மொத்த திட்டமும், மக்களை நிலவில் குடியிருக்க வைப்பதே, ஒரு புதிய விண்வெளி நிலையத்தை நிலவில் நிறுவி, விண்வெளி வீரர்கள் வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான் என   நாசா தரப்பு தெரிவித்துள்ளது.