அடுத்த மாதம் பலாலி விமான நிலைய சேவைகள் ஆரம்பம்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் வசதிகளுக்கு அமைய பலாலி விமான நிலையத்தில் 72 பயணிகள் பயணிக்க கூடிய விமானங்களை மாத்திரமே தரையிறக்க முடியும்.

இதற்கமைய,

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை  எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , திருச்சிக்கு ஒரு வழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படும்.

இந்நிலையில், இன்று முதல் ரிக்கெட் வழங்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.