அதள பாதாளத்தில் செங்கல் கைத்தொழில்!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, கட்டுமானத் துறையும் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் பல்லம, நாகவில மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் செங்கல் உற்பத்தியில் நாடளாவிய ரீதியில் முன்னணியில் உள்ளன.

அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகம்.

நாகவில, அரசன்வெவ, வில்பொத்த கிழக்கு, வில்பொத்த மேற்கு ஆகிய கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களுக்கு கடந்த பருவத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிக கேள்வி இருந்தது.

ஆனால், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், பல பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குக் கிடைக்கும் செங்கற்களின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஏறக்குறைய 20 லட்சம் செங்கற்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்க முடியாமல் இந்தத் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்து செங்கற்களை கொள்வனவு செய்பவர்கள் மிகக்குறைந்த விலையில் செங்கற்களை கோருவதன் மூலம் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழில் அதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமது தொழில்துறையில் உள்ள பிரச்சினைகளை அரசாங்கம் உடனடியாக தீர்த்து செங்கல் கைத்தொழிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.