அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, அதிமுகவின் இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்று தீர்மானம் 4இன் படி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தப் பொறுப்புக்கான இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்