ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெற்று முடிந்த 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையிலுள்ளார்.இந்நிலையில் அவருக்கு எதிராக தேர்தல் பிரசார களத்தில் ஈடுபட்டவர்களும் தமது தரப்பினரின் தோல்வியை ஏற்றுக்கொண்டு அநுரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும்
இதற்கமைய, எம்.ஏ.சுமந்திரன், இன அல்லது மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியை அடைந்ததற்காக திசாநாயக்கவை பாராட்டினார், இது அவரது பிரசாரத்தை வேறுபடுத்திய ஒரு முக்கிய காரணியாகும் என கூறியுள்ளார்.