அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 19 வயதுடைய இளைஞன் பலி.

அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையிலேயே இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.