அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் உட்பட ஐவர் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் உட்பட ஐவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் நகரிலேயே 7 வது மற்றும் வடக்கு அவென்யூ பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலை சுமார் 8 மணி அளவில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழு, நச்சு வாயு காரணமாக அந்த குடியிருப்புக்குள் நுழைய முடியாமல் தடுமாறினர்.

ஆனால் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒருவர் மட்டுமே உள்ளே நுழைய, மூன்று பிள்ளைகள் உட்பட ஐவரின் சடலங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், விரிவான சோதனைக்கு பின்னர், அப்பகுதி மக்களுக்கு தங்கள் குடியிருப்புக்கு திரும்ப அனுமதி அளித்துள்ளனர்.

இதனிடையே, அப்பகுதியில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளும் நிறுவனம் முன்னெடுத்த விசாரணையில், எரிவாயு கசிவு தொடர்பில் எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், அந்த குடும்பம் இறந்ததற்கான காரணம் மற்றும் அந்த குடியிருப்பில் அடையாளப்படுத்தப்பட்ட நச்சு வாயு தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.