அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு. : 6 பேர் பலி.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் நேற்றைய தினம் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிகாகோ நகரின் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் ஈடுபட்டவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக ராபர்ட் கிரிமோ என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிகாகோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.