அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 கருப்பினத்தவர்கள் பலி

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இனவெறி துப்பாக்கிச் சூட்டில் 3 கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா மாநிலத்தில் ஜெக்சன்வெலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், இரு ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.