அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி, 10 பேர் காயம்!

அமெரிக்காவின் ஆர்கான்சஸ் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
 
பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறாயினும் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்கான்சஸ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
 
காயமடைந்தவர்களில் 2 காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.