முன்னாள் பாப் ஐடல் போட்டியாளர் டேரியஸ் கேம்ப்பெல் டேனேஷ் (Darius Campbell Danesh) குளோரோஎத்தேன் சுவாசித்ததால் உயிரிழந்ததாக மருத்துவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
பாடகர் மற்றும் நடிகர் மினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்துள்ளார்.
தெற்கு மின்னசோட்டா பிராந்திய மருத்துவப் பரிசோதகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குளோரோஎத்தேன் நச்சு விளைவுகள் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை காரணிகளாகக் கண்டறியப்பட்டன.
இதன் போது அவரது மரணம் ஒரு விபத்து என்றும் பரிசோதகர் அறிக்கை வெளியிட்டார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விபரங்கள் காவல் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.