அமெரிக்க இரகசிய விமானங்கள்  கட்டுநாயக்காவில் தரையிறக்கம்

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

நேற்று (14.2.2023)  இரவு 07.00 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களின் வருகையை முன்னிட்டு சுமார் 03 நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நேற்று பிற்பகல் முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Boeing C-17 A Globemaster-¡¡¡ ரக விமானத்திலேயே இந்த இராஜதந்திரிகள் வந்துள்ள நிலையில், இந்த விமானம் கிரீஸ் நாட்டில் இருந்து வந்துள்ளது.

எனினும் இந்த விமானம் இலங்கை வந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.