அரசாங்கத்துக்கு எதிரான ஆர்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிரான இன்றைய (9) ஆர்பாட்டத்திற்கு நாங்கள் ஆதரவு என ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்களால் இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது ஆதரவை வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டங்களின் போது மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்குமாறு காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.