அரசியலில் களமிறங்கும் சந்திரிக்காவின் மகன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வழிகாட்டலில் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்திரிக்கா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு, களுத்துறை மாவட்டத்தின் தலைவராகவும் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது மகன் அரசியலுக்கு வருவதை முன்னர் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமது புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு விமுக்தி குமாரதுங்கவுக்கு ஏற்கனவே குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.