“அவதார் 2”  முன்பதிவு  படு மாஸ் வசூல்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் தான் அவதார்.

உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இரண்டாம் பாகம் “அவதார்-த வே ஒஃப் வாட்டர்” என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ரிலீஸ் தேதி அறிவித்த நிலையில் ப்ரீ புக்கிங் படு மாஸாக நடந்து வருகிறது.

வட அமெரிக்காவில் இப்படத்தின் முன்பதிவு மட்டுமே 38 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.