ஆசிய கிண்ணத்தை 6 ஆவது தடவையாக இலங்கை கைப்பற்றியது.

ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 06 ஆவது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

SLvPAK

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி  களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

BHANUKA RAJAPAKSA

இதனைத் தொடர்ந்து 171 என்ற வெற்றி இலக்கை  நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்று 23 ஓட்டங்களால் தோல்வி அடைந்துள்ளது.

SLvPAK

1986,1997, 2004, 2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் அணி இதுவரையில் இரண்டு முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

SLvPAK

1997 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றது.