ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நேற்று முன் தினம் விஜயவாடாவிற்கு திரும்பிய குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குழந்தையின் குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.