ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு. ; 20 பேர்  பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல ரஷ்ய தூதரகம் செயல்பட்டு வந்த நிலையில் பலரும் விசா பெற விண்ணப்பிக்க வந்துள்ளனர்.

அப்போது தூதரகம் அருகே பயங்கரவாதி ஒருவரால் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உடனடியாக காயம்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ரஷ்ய தூதரக அதிகாரி 2 பேர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் ஆப்கானிஸ்தான் – ரஷ்யா இடையே புதிய பிரச்சினைகளையும் உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.