ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை அணி.

T-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01 இல் நடைபெற்ற தொடரின் 32 ஆவது போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இலங்கை அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.    

AFGvSL-T20WorldCup