ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம். – 250 பேர் பலி, எண்ணிக்கை அதிகரிப்பு 

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர்.

பலி எண்ணிக்கை உயரக்கூடும் என  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.