ஆப்கான் நில அதிர்வில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ தொட்டது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது.

குறைந்தது 950 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் (Khost) நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.1 மெக்னிடீயூடாக நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.