ஆற்றில் நீராடச் சென்று பலியான 16 வயது மாணவன்

லுணுகலை ஹொப்டன் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொப்டன் 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவை சேர்ந்த ஹொப்டன் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதான கிருபாகரசன் வினோஜன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்தெரியவருவதாவது,

குறித்த குறித்த மாணவனும் அவருடைய நண்பர்கள் இருவரும் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த வேளை திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு நீரினுள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் கற்பாறைக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

மாணவனின் சடலம் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஹொப்டன் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.