ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு. ;  3 பேர் பலி.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து – போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் மக்கே நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.