இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் கின்ஷாசா மைதானத்தில் காங்கோ பிரபல பாடகர் ஃபாலி இபுபாவின் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கடல் அலையாய் திரண்டனர்.

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானதால், முண்டியடித்துக் கொண்டு ஏராளமானோர் நிகழ்ச்சி நடைபெறும் மேடை நோக்கி செல்ல முயன்றதால்  நெரிசல்  ஏற்பட்டது.