இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத் தீ.

இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பொடாசா மற்றும் சான் ஜியோவானி உள்ளிட்ட பகுதிகளில் பரவிய காட்டுத் தீ குடியிருப்புகளையும் நெருங்கி வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக 600க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள், ஸ்கூப்பர் விமானங்கள் மூலம் கடலில் இருந்து நீரை சேகரித்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.