இந்தியாவின் மணிப்பூரில் தொடரும் பதற்ற நிலை.

இந்தியாவின் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்கின்ற நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் சுயவிபரங்களை சேகரிக்கும் பணிகளை அந்த மாநில விரைவுப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இதுவரையில் 150 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அத்துடன் பல பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் மணிப்பூரில் இரண்டு பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்ற காணொளி ஒன்று அண்மையில் வெளியான நிலையில் அது தொடர்பில் அந்த நாட்டு சி.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூரில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுடன் சட்டவிரோதமாக குடியேறியுள்ள மியன்மார் மக்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து அவ்வாறான மியன்மார் மக்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.