இந்தியாவில், இலங்கை தூதரகத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக மக்கள் ஒன்றுகூடிய போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியாவில் இலங்கை தூதரகத்திற்கு முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“கோட்டா கோ ஹோம்” என கோஷம் எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.