இந்தியாவில் குரங்கு அம்மை நோயின் முதலாவது மரணம்.

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது இந்தியாவில் பதிவான முதல் மரணம் இதுவாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 22 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

அவரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மரணம் அடைந்துள்ளார்.