இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 94 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 390 ஆக உள்ளது.