இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 41.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, 187 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 46 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு  187 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

இதனால், பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.