இந்திய மண்ணில் அவுஸ்ரேலிய அணி வெற்றி.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 211 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்றுக் கொண்ட அவுஸ்ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

INDvsAUS