இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவில் நேற்று (3) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.