இனப்படுகொலையாளி கோட்டாபய தாய்லாந்தில் தஞ்சம்.

இனப்படுகொலையாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் தாய்லாந்தின் பங்கொக் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஜூலை 14ஆம் திகதி இலங்கையிலிருந்து மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற ராஜபக்ச, சிங்கப்பூரில் தற்காலிக வீசாவில் தொடர்ந்தும் இருக்கமுடியாத நிலையிலேயே தாய்லாந்துக்கு சென்றுள்ளார்

இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.