இன்று முதல் பஸ் சேவை முற்றாக முடங்கும் அபாயம்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் பஸ் சேவை முற்றாக முடங்கலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அனைத்து தனியார் பஸ்களும் எரிபொருள் வரிசையில் சிக்குண்டுள்ளன.

இன்று ஆயிரம் பஸ்களை கூட சேவையில் ஈடுபடுத்த முடியாது என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

மிகப் பெருமளவு மக்களிற்கான மாற்று போக்குவரத்து சாதனமாக பஸ் சேவையே காணப்படுகின்றது.

வேறு எந்த வகையிலான போக்குவரத்து வசதிகளும் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.