இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம்  மற்றும்  நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பிய நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், படத்தில் ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் நடித்த விக்ரம் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களுக்கு திரையிடாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.