கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் மொகதிஷுவில் உள்ள அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள் என மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பான ஆலோசனையில் அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோர் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.