இராணுவ வசமானது எரிபொருள் விநியோகம் – CPC

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (29) எரிபொருள் விநியோகத்தை முப்படைஇ பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த சமீபத்திய நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும் இந்த முறை இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த சமீபத்திய உத்தரவின்படி மறு அறிவிப்பு வரும் வரை எந்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படாது.

அத்தியாவசிய சேவைகளுக்கான தங்கள் அடையாளத்தை நிரூபித்த பின்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.