இலங்கையில் இரட்டைக் குடியுரிமை கோரும் 1,621  அவுஸ்திரேலியர்கள்!

இலங்கையில் 2021ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்ததாக  குடிவரவு -குடியகல்வு  திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும் எண்ணிக்கையானனோர்  அவுஸ்திரேலியர்கள்.  இவர்களின் எண்ணிக்கை 1,621.

இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 795 அமெரிக்கர்களும் உள்ளனர் எனவும்  குடிவரவு – குடியகல்வு த் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 டிசம்பர் 31, 2021 வரை இந்த நாட்டில் 4, 654 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி 208 வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில்  149 பேர் பாகிஸ்தானியர்கள்,   27 பேர் ஆப்கானிஸ்தானியர்களாவர்.

மேலும், டிசம்பர் 31, 2021க்குள் அகதி அந்தஸ்தைப் பெற்று இந்த நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 912 ஆக உள்ளது. அவர்களில் 709 பேர் பாகிஸ்தானியர்கள்,  113 பேர் ஆப்கானியர்கள்.

இதேவேளை, 2021ஆம் ஆண்டு வருகை தந்த 77 வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும்  குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் தங்கியிருந்த 505 வெளிநாட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களில் 130 பேர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.