இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட அதி சொகுசு கார்கள்.

ஒருகொடவத்தை வாகன விற்பனை நிலையமொன்றில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5 அதிசொகுசு கார்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த வாகனங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்பாக வாகன உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் இவ்வாறு குறித்த சொகுசு கார்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.