இலங்கையில் இளநீருக்கு தட்டுப்பாடு. ; வெள்ளை ஈ காரணம்.

”வெள்ளை ஈ” எனும் பூச்சியினால் தென்னை மரங்கள் பாதிப்படைவதால், மார்கழி மாதத்திற்குள் இலங்கையில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னந்தோப்பு தொடர்பாக பரவும் வெள்ளை ஈ பூச்சியின் பாதிப்பு, இளநீர் நிறத்தின் மஞ்சள் நிறத்தில் இந்த பூச்சி ஈர்க்கப்படுவதால் இளநீரை மரத்தை அதிகளவில் பாதித்துள்ளது.

 கடந்த ஆண்டு, 95 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெள்ளை ஈ பாதிப்பு பரவி வருவதால், எதிர்காலத்தில் இளநீர் ஏற்றுமதி சந்தையும் பாதிக்கப்படலாம்.

இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந்தோப்புகள் வெள்ளை ஈ தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் பிரதிப் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வெள்ளை ஈ யைக் கொல்லக்கூடிய பூச்சிக்கொல்லி அல்லது பிற பூச்சிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

வெள்ளை ஈக்கள் மட்டைகளின் அடிப்பாகத்தில் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். வெள்ளை ஈ தாக்குதலால் சுரக்கப்படும் இனிப்பு சுவை கொண்ட பசை போன்ற திரவத்தினால் எறும்புகள் ஈர்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக, கறுப்பு நிற பூஞ்சான நோய் ஏற்பட்டு தென்னை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.