இலங்கையில் கடந்த மாதத்தில் 8, 179 டெங்கு நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் கடந்த மாதத்தில் 8 ஆயிரத்து 179 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும் என அந்த பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீம தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வருடத்தில் 32 ஆயிரத்து 385 டெங்கு நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கடந்த வாரம் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.