எரிபொருள் நெருக்கடியால் மக்கள் மாற்றுப் போக்குவரத்திற்கு வேகமாகத் திரும்பி வருகின்றனர்.
தனியார் போக்குவரத்திற்கு பதிலாக பொது போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதற்கிடையில், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான பெரும் கேள்வி எழுந்து வருகிறது. சைக்கிள் உதிரிபாகங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் மிகவும் ஓய்வில்லாத நிலையில் காணப்படுகின்றது.
சில சைக்கிள் கடைகளில், மக்கள் வரிசையில் இருந்து சைக்கிள்களை வாங்குவதற்கு முயற்சிப்பதும் காணப்படுகிறது.
இந்த நாட்களில் ஒரு சைக்கிளின் குறைந்தபட்ச விலை சுமார் 50,000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில குத்தகை நிறுவனங்கள் தற்போது மிதிவண்டிகளுக்கான குத்தகை வசதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.