இலங்கையில் கேக்கின் விலை அதிகரிப்பு

இலங்கையில் பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவிக்கையில்,

முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போது உள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக்கின் விலை அதிகரித்துள்ளது.

இதேவேளை, விலை உயர்வால், பண்டிகைக் காலங்களில் கேக்கின் தேவையும் 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.