இலங்கையில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமானது.
 
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
 
எனினும், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக படப்பிடிப்பு இந்தியாவின் – கேரள மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
 
இதற்கிடையில், தற்போது இலங்கையில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
 
நடிகர் விஜய்யும் இந்தப் படப்பிடிப்பில் இணைவதற்காக இலங்கை வருவாரா என இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.