இலங்கையில் சிகிச்சை இல்லாமல் சுமார் 4,000 தொழுநோயாளிகள்.

சமூகத்தில் சுமார் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாகவும், அவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், 450 க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் இந்நாட்டில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்கள் 08 வருடங்களுக்குள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அது நேரடியாக கண்களையே பாதிக்கும் என தேசிய கண் வைத்தியசாலையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.