இலங்கையில் பல பாகங்களிலும் எதிர்ப்பு பேரணிகள்

‘முழுநாடும் கொழும்புக்கு – ஜுலை 9 போராட்டம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து, தற்போது இலங்கையில் பல பாகங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கொழும்பு – கோட்டை பகுதியில், காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொது மக்களுக்கு இடையுறு ஏற்படும் வகையில் அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்திடம் அறியப்படுத்தியது.