இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து வந்த 20 வயதுடைய இலங்கை இளைஞராவார்.
காய்ச்சல், தோலில் கொப்பளங்கள், வீங்கிய நிணநீர் முனைகள் போன்ற அறிகுறிகளுடன் அவர் பாலியல் நோய் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், குறித்த நபரை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது, குரங்கு அம்மைக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த நபர் தற்போது கொழும்பு I.D.H வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.