இலங்கையை வந்தடைந்த கப்பல்

40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொண்டுவரப்பட்ட உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் நாளை முதல் நாடளாவிய ரீதியில் இந்த உர விநியோகம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.